/உள்ளூர் செய்திகள்/மதுரை/வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள் கூட்டம்வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள் கூட்டம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள் கூட்டம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள் கூட்டம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள் கூட்டம்
ADDED : மே 28, 2010 04:32 AM
மதுரை:பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் நேற்று முன்தினம் முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து மாணவர்கள் முதல் வேலையாக பிளஸ்2 கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினர். மதிப்பெண் பட்டியல் வினியோகத்தை தொடர்ந்து மாணவர்கள் குவிந்துவிடுவர் என்பதால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கலெக்டர் காமராஜ் ஏற்பாட்டில் போலீஸ் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் மாநகராட்சியின் 2 நடமாடும் கழிப்பறை என வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
காலை 6 மணி முதலே மாணவர்கள் வரத் துவங்கினர். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், மாணவிகளுக்கு பெண்களுக்கான ஐ.டி.ஐ., யிலும் பதிவு நடந்தது. உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்ரமணியன் தலைமையில் ஊழியர்கள் வேறு பணிகளை ஒத்திவைத்துவிட்டு, கல்வித் தகுதியை மட்டுமே பதிவு செய்தனர். இரவு 7 மணி வரை நீடித்த இப்பதிவின் மூலம் நேற்று ஒரே நாளில் 1500 மாணவிகளும், 970 மாணவர்களுமாக மொத்தம் 2 ஆயிரத்து 470 பேர் பதிவு செய்தனர். இப்பணி ஜூன் 2 வரை நீடிக்கும்.